திருவள்ளூர் மாவட்டத்தில் 65.61 சதவீத வாக்குகள் பதிவு

திருவள்ளூர் மாவட்டத்தில் 65.61 சதவீத வாக்குகள் பதிவு
X

பைல் படம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 65.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி-1, திருவள்ளூர், திருத்தணி, திருவேற்காடு, திருநின்றவூர், பூந்தமல்லி, பொன்னேரி ஆகிய 6 நகராட்சிகள், பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, ஊத்துக்கோட்டை, திருமழிசை, ஆரணி, கும்மிடிப்பூண்டி, நாராவாரிகுப்பம், மீஞ்சூர் ஆகிய 8 பேரூராட்சிகள் மொத்தம் 318 வார்டுகளில் 3 வார்டுகளில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இதை தவிர்த்து மீதமுள்ள 815 வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் 1797 பேர் போட்டியிடுகின்றனர். இந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று சனிக்கிழமை காலையில் 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது.

காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். தொடர்ந்து மாலை 5 மணி வரையிலும் நடைபெற்றது. இதில் முழு விவரம் வரும் வகையில் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட முதல் தேர்தலை சந்தித்த ஆவடி மாநகராட்சி பதிவான வாக்குகள் 59.13 சதவீதம்.

திருவள்ளூர் நகராட்சி.68.52%, திருத்தணி நகராட்சி.73.87%, திருவேற்காடு நகராட்சி.66.61%, பூவிருந்தவல்லி நகராட்சி.68.82%, பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக உருவெடுத்து முதல் தேர்தலை சந்தித்த பொன்னேரி நகராட்சி வாக்கு சதவீதம்.72.15%, திருநின்றவூர் நகராட்சி.62.93%, ஆரணி பேரூராட்சி.83.28%, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி.68.62%, மீஞ்சூர் பேரூராட்சி.69.68% நாரவாரிக்குப்பம் பேரூராட்சி.66.71% பள்ளிப்பட்டு பேரூராட்சி.77.78% பொதட்டூர்பேட்டை பேரூராட்சி.85.62% திருமழிசை பேரூராட்சி.80.05% ஊத்துக்கோட்டை பேரூராட்சி.77.13% சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் அளவில் பதிவான வாக்குகள் 65.61% ஆக பதிவானது.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!