திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழுகூட்டத்தில் முதல்வருக்கு நன்றி தீர்மானம்

திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழுகூட்டத்தில் முதல்வருக்கு நன்றி தீர்மானம்
X

திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்தில் மாவட்ட கவுன்சிலர் கூட்டம் மாவட்ட ஊராட்சி தலைவர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழுகூட்டத்தில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். துணை தலைவர் டி.தேசிங்கு முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி செயலர் (பொறுப்பு) ஸ்ரீதர் அனைவரையும் வரவேற்றார். இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் மாவட்ட ஊராட்சி குழு கவுன்சிலர்களுக்கு பயணப்படி உயர்த்தி அறிவித்த தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரியை தமிழ்நாடு மாநில மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் பணிகளை கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் குழு உறுப்பினராக நியமித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், மாநில நிதிக்குழு மானியத்தின் மூலம் அனைத்து மாவட்ட கவுன்சிலர்கள் பகுதிகளிலும் வளர்ச்சி திட்ட பணிகளை நிறைவேற்றுவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் மாவட்ட ஊராட்சி செயலர் பொறுப்பு ஸ்ரீதர், மாவட்ட கவுன்சிலர்கள் இந்திரா பொன்குணசேகர் ஏ.ஜி.ரவி, விஜயகுமாரி சரவணன், டி.தென்னவன், கே.யு.சிவசங்கரி, சரஸ்வதி சந்திரசேகர், மோரை மு.சதிஷ்குமார், சு.சக்திவேல், மு.சாரதம்மா, எஸ்.ராமஜெயம், எம்.சித்ரா, டி.தேசராணி, கிதா, கோ.சுதாகர், இ.தினேஷ்குமார், த.தேவி, மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!