திருவள்ளூர் மாவட்டம்: ஒரே நாளில் 1791 பேருக்கு கொரோனா, 20 பேர் பலி!

திருவள்ளூர் மாவட்டம்: ஒரே நாளில் 1791 பேருக்கு கொரோனா, 20 பேர் பலி!
X
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில்1791 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 20பேர் இறந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 1791 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால் இதுவரை 88,095 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.

ஒரே நாளில் 1335 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால், இதுவரை 75,197 பேர் டிஸ்சார்ஜ் ஆனதாகவும் தெரிவித்த சுகாதாரத் துறையினர், 20 பேர் உயிரிழந்திருப்பதால் திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 1001 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை பொன்னேரி, திருத்தணி, பூந்தமல்லி அரசு மருத்துவமனை உள்ளிட்ட சிறப்பு மையங்களில் 11,797 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!