திருவள்ளூர்: ஒரே நாளில் 583 பேருக்கு கொரோனா
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அறிவித்திருப்பதால் அதிகரித்து வருகின்றது. இதன் வெளிப்பாடாக இன்றும் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இன்று ஒரே நாளில் 583 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 1229 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இன்று 29 பேர் கொரோனாவின் காரணமாக உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இன்று வீடுகளின் தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை மூலமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 5784 ஆக உள்ளது.
மேலும் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,03,990 ஆகவும், இதில் 96,733 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவிற்காக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1473 என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu