மாட்டு கொட்டகையாக மாறும் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம்
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றித்திரியும் மாடுகள்.
மாடுகள் முட்டி உயிரிழப்பதும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தினந்தோறும் ஏராளமான மக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக வழங்கவும் பிற துறைகளில் பணிகளுக்காக அதிகாரிகளை பார்க்க வருகின்றனர்.
இந்த நிலையில். ஆட்சியர் அலுவலகத்தில் தினந்தொறும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் அலுவலக நுழை வாயிலேயே தஞ்சம் புகுந்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.
அலுவலக வாயிலில் ஆட்சியர் கார் நிறுத்துமிடம் மற்றும் ஆட்சி அலுவலகங்களை சுற்றி ஏராளமான மாடுகள் சுற்றித் திரிந்து வருகிறது. மேலும் ஆட்சியர் அலுவலகத்திலேயே மாடுகள் தஞ்சம் பூவதால் அங்கேயே சாணம் போட்டும் அப்பகுதியை அசுத்தம் செய்து அதை பணியாளர்கள் மாட்டுகொட்டகையாக மாறி சுத்தம் செய்யும் ஆவலமும் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஒரு சில மாடுகள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் மாடுகளுக்குள் சண்டையிட்டுக் கொள்வதும் பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் உறைந்துள்ளனர் ஆட்சியாளர் அலுவலகத்திற்கு வரும் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள், ஊனமுற்றோர் என அனைத்து தரப்பு மக்களும் பெரும் அச்சத்தில் உறைந்துள்ள நிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றித் திரியும் மாடுகளால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றி திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என ஆட்சியருக்கு கோரிக்கை வைத்த வருகின்றனர்.
இது தவிர திருவள்ளூர் நகரத்தில் தேசிய நெடுஞ்சாலைகளிலும் மாடுகள் சாலைகளை ஆக்கிரமித்து சாலைகளில் படுத்து உறங்குவதாள் விபத்துக்கள் ஏற்படுவதாகவும், ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றித் திரியும் மாடுகளையே கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கண்டு கொள்ளுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu