திருவள்ளூர் கலெக்டர் பொன்னையா நகராட்சி நிர்வாக ஆணையராக மாற்றம்!

திருவள்ளூர் கலெக்டர் பொன்னையா நகராட்சி நிர்வாக ஆணையராக மாற்றம்!
X

நகராட்சி நிர்வாக ஆணையராக மாற்றப்பட்டுள்ள பொன்னையா

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பொன்னையா, நகராட்சி நிர்வாக ஆணையராக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் 20ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பொன்னையா, நகராட்சி நிர்வாக ஆணையராக பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இவர், கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் தேதி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார். 7 மாதம் 12 நாட்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியராக யார் நியமிக்கப்படுவார் என்பது விரைவில் தெரியவரும் என ஆட்சியர் அலுவலக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!