திருவள்ளூர் நகர காங்கிரசார் இந்திரா காந்தி நினைவு நாள் அனுசரிப்பு
இந்திரா காந்தியின் 39 வது நினைவு நாளை முன்னிட்டு திருவள்ளூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட, மாநில நிர்வாகிகள் மரியாதை செய்தனர்.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அவர்களின் 39-வது நினைவு நாளையொட்டி இன்று நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் அவரது நினைவு நாளை அனுசரித்து வருகின்றனர்.
இதில் ஒரு பகுதியாக திருவள்ளூரில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் ஆனந்தன், மாநில செயலாளர் மோகன்தாஸ். மாவட்ட முதன்மை துணைத் தலைவர் தளபதி மூர்த்தி ஆகியோர்களின் ஏற்பாட்டில் திருவள்ளூர் அடுத்து மணவாள நகரில் அமைந்துள்ள இந்திரா காந்தியின் திருவுரு சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து திருவள்ளூர் நகரத்தில் அமைந்துள்ள தியாகி முத்துரங்கம் பக்தவச்சலம் நினைவு மொரியல் காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் திருவள்ளூர் எ.அருள் பூண்டி தலைவர் பழனி, சிபி சத்யா, வி எம் தாஸ், செந்தில், செல்வகுமார், அருள், மாயாண்டி, ராமன், உமாபதி, குமார், பாரதி, ஸ்டாலின், மாவட்ட ஒன்றிய பேரூர் அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu