திருவள்ளூர் அருகே பேருந்து கவிந்து 21 பெண்கள் படுகாயம்: ஒருவர் பலி

திருவள்ளூர் அருகே பேருந்து கவிந்து  21 பெண்கள் படுகாயம்:  ஒருவர் பலி
X
திருவள்ளூர் அருகே தனியார் கம்பெனி பேருந்து கவிந்த விபத்தில் 21 பெண்கள் படுகாயமடைந்தனர்; ஒருவர் உயிரிழந்தார்.

திருவள்ளூர் அடுத்த தொடுகாடு ஊராட்சி, நமச்சிவாயபுரத்தில் குட்லெதர் ஷூஸ் என்ற தனியார் கம்பெனி இயங்கி வருகிறது. இந்த கம்பெனியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இக்கம்பெனியில் பணிபுரியும் பெண்கள், வேலை முடிந்து வெடடு வீட்டிற்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.

இந்த கம்பெனி பேருந்தை டிரைவர் ரஞ்சித் என்பவர் ஓட்டி சென்றார். திருவள்ளூர் அருகே வந்துகொண்டிருந்தபோது பிச்சிவாக்கம் செக்போஸ்ட் அருகே எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்தை திருப்பியபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அதில் பயணம் செய்த 21 பெண்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி அரக்கோணம் அடுத்த மின்னல் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவர் உயிரிழந்தார்.

இந்த விபத்தில் ஜெயரஞ்சனி, கோமதி, மாலா உள்ளிட்ட 20 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெற்று, மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து, சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story