திருவள்ளூர் அருகே வாட்டர் ஹீட்டரில் மின்கசிவு :மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

திருவள்ளூர் அருகே வாட்டர் ஹீட்டரில் மின்கசிவு :மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி
X

மின்சாரம் பாய்ந்து பலியான சிறுவன் (பழைய படம்)

திருவள்ளூர் அருகே அதிகத்தூரில் வாட்டர் ஹீட்டரில் மின்கசிவு ஏற்பட்டதால் மின்சாரம் பாய்ந்து 7வயது சிறுவன் பலியானான்.

திருவள்ளூர் அடுத்த அதிகத்தூரில் குளியலறையில் உள்ள வாட்டர் ஹீட்டரில் கையை வைத்ததன் காரணமாக 7 வயது சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் விநாயகம். இவரது மனைவி நிஷாந்தினி. இவர்களது மகன் அவினாஷ் (7). நேற்று மாலை 5 மணி அளவில் வீட்டின் குளியலறையில் இருந்த வாட்டர் ஹீட்டரில் (தண்ணீர் கொதிகலனில்) மின் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை அறியாத சிறுவன் அவினாஷ் அந்த தண்ணீரில் கை வைத்த போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு உள்ளான். உடனடியாக குழந்தையின் பெற்றோர் சிறுவனை திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை அவினாஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

வீட்டில் உள்ள குளியலறையில் நீர் கொதிகலனில் அதாவது வாட்டர் ஹீட்டரில் இருந்து வந்த நீரை தொட்டு அதனால் மின்சாரம் பாய்ந்து 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிகத்தூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா