திருவள்ளூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆலோசனை!

திருவள்ளூரில் கொரோனா  தடுப்பு  நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆலோசனை!
X

 கொரோனா  தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட கண்காணிப்பாளர் , நகராட்சி நிர்வாக ஆணையர்  தலைமையில்  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொன்னையா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்