திருவள்ளூரில் 'தடுப்பூசி இல்லை' என்கிற அறிவிப்பால் பொதுமக்கள் ஏமாற்றம்
திருவள்ளூர் கொரோனா தடுப்பூசி மையத்தல் திரண்டு நின்ற மக்கள் கூட்டம்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனையடுத்து அனைவரும் தடுப்புசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் 272 மையங்களில் தடுப்பூசி போடப்படும் என அறிவித்து, தடுப்பு ஊசி செலுத்திப்பட்டு வந்தது.
அரசு வழங்கிய தடுப்பூசி காலியானதாக செய்தி பரவியது. இந்நிலையில் திருவள்ளூரில் பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி போடவில்லை. திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனை அருகில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது.
இதனையடுத்து அங்கு தடுப்பூசி செலுத்த ஏராளமானோர் குவிந்தனர். பிற்பகல் 1 மணியளவில் 18 - 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி காலியானதால் தடுப்பூசி போடப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.
கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போட வேண்டும் என அறிவிக்கும் அரசு அதற்கான ஏற்பாடுகளை செய்யாதது ஏமாற்றத்தைத் தருவதாகவும், மீண்டும் அரசு அறிவிக்கும் வரை யாரும் தடுப்பூசி செலுத்த வேண்டாம் என சுகாதாரத் துறையினர் தெரிவித்ததால் தடுப்பூசி செலுத்த வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
நேற்றைய நிலவரப்படி 10 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என தெரிவித்த நிலையில் இன்றைக்குள் அது தீர்ந்து விடும் என்பதால் அரசு தரப்பில் அதற்கான உத்தரவு வந்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu