சாலைகளில் சுற்றினால் கடும் நடவடிக்கை திருவள்ளூர் ஏடிஎஸ்பி எச்சரிக்கை!
கண்காணிப்பு பணியில் போலீசார்
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் தமிழகத்தை புரட்டிப் போட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் இதனால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த கடந்த 10ம் தேதி முதல் 23ம் தேதி வரை தளர்வுகளோடு கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
ஆனால் தொற்றின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மருத்துவ குழுவினர் அனைத்து கட்சியினரிடையே நடந்த ஆலோசனைக்கு பின் இன்று, 24ம் தேதி முதல் 1வாரத்திற்கு முழு ஊரடங்கை அறிவித்தது.
இதில் மருந்தகம், பால் கடைகள் மட்டும் இயங்கலாம். ஹோட்டல்கள் குறிப்பிட்ட நேரத்தில் பார்சல் மட்டும் வழங்க வேண்டும் என பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது. நேற்று இரவு திருவள்ளூர் ஏ.டி.எஸ்.பி முத்துக்குமார் ஊத்துக்கோட்டையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இன்று முழு ஊரடங்கின் போது அனுமதியின்றி சாலைகளில் சுற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் மருந்து கடைகளுக்கு சென்று வருபவர்கள் கடையிலிருந்து ரசீது பெற்று வரவேண்டும். ஆந்திர மாநிலத்திலிருந்து அனுமதியின்றி வரக்கூடாது. அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது பேரூராட்சி ஊழியர்களும் காய்கறி கடைகள் வைப்பது குறித்து கேட்டறிந்தார். ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி. சாரதி, ஆய்வாளர் குமார், தனிப்பிரிவு போலீஸ் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu