/* */

திருவள்ளூர்: கொரோனாவுக்கு அதிமுக அம்மா பேரவை மாநில இணைச்செயலாளர் பலி!

திருவள்ளூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிமுக அம்மா பேரவை மாநில இணைச்செயலாளர் சம்பத்குமார் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

திருவள்ளூர்: கொரோனாவுக்கு அதிமுக அம்மா பேரவை மாநில இணைச்செயலாளர் பலி!
X

கொரோனாவுக்கு பலியான சம்பத்குமார்.

திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார். செவ்வாய்பேட்டையில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த இவர், எம்ஜிஆர் மீது கொண்ட பற்றால் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். கட்சிப் பணியில் படிப்படியாக உயர்ந்து மாநில எம்ஜிஆர் அணி இணைச் செயலாளராகவும் அதனைத் தொடர்ந்து அம்மா பேரவை மாநில இணைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

59 வயதான சம்பத் குமாருக்கு சுமதி என்ற மனைவியும் சோனியா என்ற டாக்டர் படிப்பு முடித்து பயிற்சி பெற்றுவரும் மகளும் பொறியியல் படிப்பு முடித்த நிரஞ்சன் என்ற ஒரு மகனும் உள்ளனர். தற்போது திருவள்ளூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளராகவும் நியமிக்கப்பட்டு, தனது சிறப்பான பணியை அதிமுகவுக்காக அவர் செய்து வந்துள்ளார்.

ஆசிரியராக பணியாற்றி வந்ததால் அவரை அனைவரும் வாத்தியார் என்று அழைத்து வந்தனர். இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பூந்தமல்லி தொகுதியில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு தீவிரமாக அலைந்துள்ளார். சீட்டு கிடைக்காத நிலையில் கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு ஒதுக்கப்பட்டதால் தேர்தல் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதனை அடுத்து அவரது உறவினர் திருவள்ளூரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மேலும் கட்சித் தொண்டர்கள் மற்றும் உறவினர்களால் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது சொந்த ஊரான செவ்வாப்பேட்டைக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.

Updated On: 29 May 2021 8:13 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  4. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  5. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  6. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  7. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  8. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!