திருவள்ளூர்: தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பில் 5204 வழக்குகள் தீர்வு
தேசிய நீதிமன்றத்தில் வழக்குகள் தீர்வு காணப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதி மன்றம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக திருவள்ளூர், பொன்னேரி, திருத்தணி, அம்பத்தூர், திருவொற்றியூர், பள்ளிப்பட்டு, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, பூந்தமல்லி, மாதவரம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் நடைபெற்றது.
இதில் நீதிமன்றங்களில் அனைத்து நிலுவையிலுள்ள உரிமையியல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், காசோலை வழக்குகள், குற்றவியல் வழக்குகளில் சமாதானமாக செல்லக் கூடிய வழக்குகள் மற்றும் வங்கி சார்ந்த நிலுவையில் அல்லாத வழக்குகள், சமரசம் பேசி முடிக்கப்பட்டன. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் நிலுவையிலுள்ள 4656 வழக்குகள் சமசர தீர்வுக்கு எடுக்கப்பட்டு 2576 வழக்குகள் முடிக்கப்பட்டு 23 கோடியே 2 லட்சத்து 25 ஆயிரத்து 749 தொகைக்கு தீர்வு காணப்பட்டது.
மேலும் நிலுவையில் அல்லாத 548 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப் பட்டு அனைத்து வழக்ககளும் முடிக்கப்பட்டு 2 கோடியே 35 லட்சத்து 60 ஆயிரத்து 672 தொகைக்கு தீர்வு காணப்பட்டது. இதனால் மொத்தம் 5204 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு 3124 வழக்குகள் முடிக்கப்பட்டு 25 கோடியே 37 லட்சத்து 86 ஆயிரத்து 421 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டதாக நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திருவள்ளூரில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவர் செல்வசுந்தரி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மகளிர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி சுபத்திரா தேவி, முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி கணபதி சாமி, மோட்டார் வாகன விபத்து சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி மற்றும் நிரந்தர லோக் அதாலத் தலைவர் சரஸ்வதி, குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதபதி வித்யா, தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வேலாராஸ், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செய லாளர் மற்றும் சார்பு நீதிபதி சாண்டில்யந், சார்பு நீதிமன்ற நீதிபதி சுதாராணி, மாவட்ட முன்சீப் நீதிபதி பிரியா, கூடுதல் மாவட்ட முன்சீப் நீதிபதி ஸ்டார்லி, குற்றவியல் நீதிமன்ற நீதித்துறை நடுவர்கள் முகழாம்பிகை, சத்தியநாராயணன், செல்வ அரசி, பவித்ரா மற்றும் வழக்குரைஞர்கள், வங்கி அலுவலர்கள், வழக்குரைஞர்கள் நீதிமன்ற ஊழியர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu