திருவள்ளூர்: இன்று ஒரே நாளில் 503 பேருக்கு கொரோனா தொற்று

திருவள்ளூர்: இன்று ஒரே நாளில் 503 பேருக்கு கொரோனா தொற்று
X
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 503 பேருக்கு கொரோனா தொற்று உறுதி என மாவட்ட நிர்வாகம் தகவல்.

தமிழகத்தில் 2வது கட்ட கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. இதன் வெளிப்பாடாக இன்று ஒரே நாளில் மாவட்டத்தில் 503 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

மேலும் 316 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருவர் கொரோனாவின் காரணமாக உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இன்று வீடுகளில் தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை மூலமாக கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2768 ஆகவும் உள்ளது.

மேலும் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 51,024 ஆகவும் இதில் 47,522 முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவிற்காக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 734 என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்