திருவள்ளூர்: நேருக்கு நேர் பேருந்துகள் மோதல் 20 பேர் படுகாயம்
திருவள்ளூரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற அரசு பேருந்தும், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருந்து திருவள்ளூர் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த தனியார் தொழிற்சாலை பேருந்தும் போளிவாக்கம் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்து. இரு பேருந்துகளில் இருந்த 5 பெண்கள் உட்பட 20 மேற்பட்டவர்கள் காயம். மணவாளநகர் காவல்துறையினர் விசாரணை.
திருவள்ளூரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற அரசு பேருந்தும், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வந்த தனியார் பேருந்தும் போளிவாக்கம் பகுதியில் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு கால் முறிவு ஏற்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார்.
அதேபோல் பேருந்தில் பயணித்த சக பயணிகளும் தனியார் பேருந்தில் பயணித்த சக பயணிகளும் 20க்கும் மேற்பட்டோர் மீட்டு 108 அவசர ஊர்தி மூலம் சென்னை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 5 பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மணவாளநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் கார் கனரக வாகனங்கள் தனியார் தொழிற்சாலை பேருந்துகள் என செல்லும் சாலை விரிவாக்கம் செய்து தரவேண்டும் எனவும், சாலையை விரிவாக்கம் செய்யாததால் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுவது தடுக்கப்படும் என்று வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அரசு விரைந்து திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையை விரிவாக்கம் செய்து தரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu