வலைதளத்தில் வதந்தி பரப்பிய சாட்டை துரைமுருகன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
நாம் தமிழர் கட்சியின் திருச்சி மாவட்ட இளைஞர் பாசறை பொறுப்பாளர் சாட்டை துரைமுருகன்.
வலைத்தளத்தில் வதந்தி பரப்பிய யூடியூபர் சாட்டை துரைமுருகன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கடந்த டிசம்பர் மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பெண் ஊழியர்களுக்கு தங்கும் விடுதியில் வழங்கப்பட்ட தரமற்ற உணவு சாப்பிட்டு வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் பூந்தமல்லி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனிடையே நாம் தமிழர் கட்சியின் திருச்சி மாவட்ட இளைஞர் பாசறை பொறுப்பாளர் சாட்டை துரைமுருகன் என்பவர் தரமற்ற உணவு சாப்பிடப் பெண் ஊழியர்கள் 9 பேர் உயிரிழந்ததாக யூடியூபில் வதந்தி செய்தி வெளியிட்டிருந்தார். இதையடுத்து அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 4.ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், அருகே ஒரகடம், பூந்தமல்லி சாலை அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் போலீசார் மற்றும் மாவட்ட ஆட்சியர் சமரசம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காணாமல் போனதாக கூறப்பட்ட பெண் ஊழியர்களிடம் வீடியோ காலில் மாவட்ட ஆட்சியர் பேசி அவரது, உடல்நிலை குறித்து அனைவரும் முன்னிலையில் விசாரிப்பு நிலமையை கேட்டறிந்தார். இதையடுத்து இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டனர் தனியார் நிறுவன ஊழியர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியதாக சாட்டை துரைமுருகன் மீது திருவள்ளூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து.
திருச்சியில் சாட்டை துரைமுருகனை திருவள்ளூர் காவல் துறையினர் கடந்த 19ம் தேதி கைது செய்தனர். அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு. பின்னர் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சாட்டை துரைமுருகனை திருவள்ளூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார் பரிந்துரையின் பெயரல் சாட்டை துரைமுருகன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி சாட்டை துரைமுருகன் குண்டர் சட்டத்தில் கைது செய்து சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu