திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை
X

திருவள்ளூரில் நேற்று இரவு பெய்த கனமழை.

வெப்பச்சலனம் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

திருவள்ளூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக பகல் நேரத்தில் வெப்பம் அதிகமாக இருந்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணிவரை தொடர்ச்சியாக இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.

அதில்,

திருவள்ளூர் 13 சென்டிமீட்டர்

தாமரைப்பாக்கம் 10 செ.மீ

பூண்டி 9 செ.மீ

பள்ளிப்பட்டு 9 செ.மீ

சோழவரம் 7 செ.மீ

பூந்தமல்லி 5 செ.மீ

திருத்தணி 4 செ.மீ மழையும் கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது.

இதனால் 2 நாட்களாக வெயில் வாட்டி எடுத்திருந்த நிலையில் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வந்திருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு 11 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரை இடி மின்னலுடன் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி கொடுத்ததால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!