பொன்னேரி அருகே பெண்ணிடம் மூன்று சவரன் தங்க சங்கிலி பறிப்பு!

பொன்னேரி அருகே பெண்ணிடம் மூன்று சவரன் தங்க சங்கிலி பறிப்பு!
X
பொன்னேரி அருகே மளிகை கடையில் சிகரெட் வாங்குவது போல் நடித்து கடையில் உரிமையாளரின் மனைவி கைத்தினை அணிந்திருந்த மூன்று சவரன் தங்கச் சங்கிலி பறித்து தப்பி ஓட்டம்.

பொன்னேரி அருகே கடையில் பொருட்களை வாங்குவது போல வந்து 3 சவரன் தங்க சங்கிலி பறிப்பு. பெண்ணிடம் நகையை பறித்த இருவருக்கு போலீஸ் வலை.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் பகுதியில் முருகன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த பகுதியில் நல்லபடியாக வியாபாரம் செய்து வரும் இவர், சொந்த வேலைகளின்போது தற்காலிகமாக மனைவியை கடையில் இருக்கும்படி கேட்டுக் கொள்வார். அப்படி நேற்றும் இவர் சிறிது வேலை காரணமாக தனது வீட்டிற்கு சென்றார்.

கடையை உரிமையாளர் முருகனின் மனைவி கார்த்திகா பார்த்துக்கொண்டுள்ளார். அந்த நேரத்தில் கடையில் பொருள் கேட்டு யாரும் வந்தால் எடுத்து கொடுப்பது வழக்கம். அப்போது கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர் ஏதோ ஒரு பொருளை கேட்டு வாங்குவது போல வந்து நடித்துள்ளார்.

பொருள் வாங்குவது போல கடைக்கு வந்த அவரிடம் என்ன வேண்டும் என கார்த்திகா கேட்க, சிகெரெட் வேண்டும் என கேட்டதைத் தொடர்ந்து கார்த்திகா கடைக்குள் திரும்பி சிகரெட்டை எடுக்க சென்றிருக்கிறார்.

கண் இமைக்கும் நேரத்தில் மர்ம நபர் கார்த்திகா கழுத்தில் இருந்து 3.சவரன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு, அங்கு தயாராக இருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி மின்னல் வேகத்தில் பறந்துவிட்டார். நிலைமையை சுதாரித்துக் கொண்டு கார்த்திகா கத்துவதற்குள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது.

உடனடியாக தனது கணவருக்கு சொல்லி, பின் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அளிக்கப்பட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து கொண்ட பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு காமெராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காண முயற்சித்து வருகின்றனர்.

பட்டப்பகலில் பெண்ணிடம் தங்க சங்கிலியைப் பறித்துச் சென்றது யார் என்பதை ஆய்வு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். கடையில் பொருள் வாங்குவது போல் வந்து பெண் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!