இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் கைதானவர்கள் கோர்ட்டில் ஆஜர்

இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் கைதானவர்கள் கோர்ட்டில் ஆஜர்
X

இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

Murder Case -இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் கைதானவர்கள் திருவள்ளூர் கோர்ட்டில் போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர் படுத்தப்பட்டனர்.

Murder Case -திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் மன்னூர்பேட்டையில் கடந்த 2014 ஆம் ஆண்டு இந்து முன்னணி திருவள்ளூர் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் 16 பேர் கைது செய்யப்பட்டு முக்கிய குற்றவாளிகளுக்கு மட்டும் ஜாமீன் வழங்காமல் சிறையில் உள்ளநிலையில் தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நான்காவது குற்றவாளியான காஜா மொய்தீன் மற்றும் கர்நாடக மாநிலத்தில் அடைக்கப்பட்டிருந்த ஒன்பாதாவது குற்றவாளி சாதிக் பாஷா ஆகிய இரண்டு முக்கிய குற்றவாளிகளை டெல்லி மற்றும் கர்நாடக போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.

திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வராணி முன்பு அவர்களை ஆஜர் படுத்தினர். அதைத் தொடர்ந்து மீண்டும் குற்றம் சாட்டப்பட்டவர்களை வரும் 01.11.2022 அன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்க பட்டதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் திகார் மற்றும் கர்நாடக சிறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!