திருவள்ளூா் வீரராகவப் பெருமாள் கோவில் தை மாத பிரமோற்சவ விழா துவங்கியது

திருவள்ளூா் வீரராகவப் பெருமாள் கோவில் தை மாத பிரமோற்சவ விழா துவங்கியது
X

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில்  தைமாத பிரமோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவள்ளூா் வீரராகவப் பெருமாள் கோவில் தை மாத பிரமோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூா் வீரராகவப் பெருமாள் கோவில் தை மாத பிரமோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து காலை 7 மணிக்கு தங்க சப்பரம் அலங்காரத்தில் உற்சவர் வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கோவில் உள் புறப்பாடு வந்து செல்வர் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஆண்டுதோறும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சுவாமி திருவீதி புறப்பாடு ரத்து செய்யப்பட்டு கோவிலில் உள் புறப்பாடு நடைபெற்று செல்வர் மண்டபத்தில் எழுந்தருள்வார் என கோவில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

நாளை 28-ஆம் தேதி காலை ஹம்ச வாகன அலங்காரத்திலும் , இரவு சூரியபிரபை அலங்காரத்திலும் உற்சவா் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான 29-ம் தேதி காலை கருட சேவையும் கோபுர தரிசனமும் நடைபெறுகிறது. தொடர்ந்து 5வது நாள் 31-ம் தேதி அமாவாசையை முன்னிட்டு ரத்னாங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான பிப்ரவரி 2-ஆம் தேதி காலை திருத்தோ் விழாவும், 9-வது நாளான 4ம் தேதி தீர்த்தவாரியும், 10-வது நாளான 5-ஆம் தேதி வெட்டிவோ் சப்பரம் அலங்காரத்தில் இரவு 8 மணிக்கு பெருமாள் காட்சியளிக்கவும் உள்ளாா்.

ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் பிரம்மோற்சவ திருவிழாவில் திருவீதி உலா இந்த ஆண்டு இல்லாதது பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!