சிறுகதை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வாழ்த்து

சிறுகதை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வாழ்த்து
X

சிறுகதை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பரிசு வழங்கினார்.

சிறுகதை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வாழ்த்து தெரிவித்து பரிசளித்தார்.

பேராசிரியர் மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் சிறுகதை போட்டியில் வெற்றி பெற்ற திருவள்ளூர் அரசு பள்ளி மாணவியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக அரசின் சார்பில் பேராசிரியர் மா.நன்னன் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் பள்ளிகளில் நடைபெற்றது.இதன் நிறைவு விழா கடந்த ஜூலை மாதம் 30-ந் தேதி சென்னை தியாகராயர் கலை அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவையொட்டி பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த பள்ளி மாணவர்களுக்கு சிறுகதை எழுதும் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறு கதை எழுதினர்.

இந்த போட்டியில் திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட ஆர்.எம்.ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் ஜெயஜனனி என்ற மாணவி வெற்றி பெற்றார். வெற்றி பெற்று சிறப்பு பரிசினையும் வென்றார் . இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவி ஜெயஜனனியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

இதுபோன்று அரசின் சார்பில் நடத்தப்படும் பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டி,சிறுகதை போட்டிகளில் கலந்து கொண்டு மாணவ மாணவிகள் தங்களது திறமையை வளர்த்துக்கொள்ளவேண்டும், பரிசு பெறுவதன் மூலம் அவர்கள் தங்களது எதிர்கால வாழ்க்கையை வளமாக்கி கொள்ள முடியும் என்றும் மாவட்ட ஆட்சியர் வாழ்த்தினார்.


Tags

Next Story
ai healthcare products