காங்கிரஸ் பிரமுகர் தசரத நாயுடு மரணம்: ஜெயக்குமார் எம்.பி. இரங்கல்

நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார்
திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் துணை செயலாளர் தசரத நாயுடு இழப்பிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர் தெற்கு மாவட்ட துணை செயலாளர் தசரத நாயுடு (65). இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்ததாகவும், தீவிர காங்கிரஸ் தொண்டரான இவர், காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ளார்.
இவரது இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பேரிழப்பாகும் என்றும் தசரத நாயுடு குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினருக்கும் மற்றும் தொண்டர்கள் மற்றும் நண்பர்களுக்கும் தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டிருப்பதாக இரங்கல் கடிதத்தில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu