வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர் கலெக்டர்

வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர் கலெக்டர்
X

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வாக்காளர்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று வாக்களிப்பதற்கான அழைப்பிதழை வழங்கினார்.

திருவள்ளூரில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர் வீட்டிற்கு மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் சென்று அழைப்பிதழ் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல்-2024 ஐ முன்னிட்டு பொதுமக்களுக்கு 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து மேளதாளங்களுடன் வாக்காளர் அழைப்பிதழ்களை வாக்காளர்கள் வீட்டிற்கு நேரடியாக சென்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் வழங்கினார்.

திருவள்ளுர் நகராட்சிக்கு உட்பட்ட ராஜாஜிபுரம், கவி காலமேகம் தெருப் பகுதியில் மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மக்களவைத் தேர்தல் 2024 ஐ முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒயிலாட்டம், மயிலாட்டம். தப்பாட்டம், குழுவினர்களோடு மேளதாளங்களுடன் தேர்தல் திருவிழா அழைப்பிதழ்களை வாக்காளர்கள் வீட்டிற்கு நேரடியாக சென்று வழங்கினார்கள்.

முன்னதாக என்.ஜி.ஓ காலணியில் உள்ள நியாய விலை கடையில் பொருட்கள் வாங்க வரும் பொது மக்களிடம் வாக்காளர் அழைப்பிதழ்களை வழங்கி வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

தொடர்ந்து பெரியகுப்பம் TELC நடுநிலைப்பள்ளி மற்றும் கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ள வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டு வாக்குச்சாவடி மையங்களுக்குரிய அனைத்து அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி மின்விளக்கு, தளம், கழிப்பறை வசதி. மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம் போன்ற பல்வேறு அடிப்படை உட்கட்ட அமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தயார் நிலையில் இருக்க வேண்டும் என உதவி தேர்தல் அலுவலர்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்டஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இராஜ்குமார்,கூட்டுறவு சங்கங்களில் மண்டல இணை பதிவாளர் சண்முகவள்ளி,திருவள்ளூர் தொகுதி உதவி தேர்தல் அலுவலர் தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சுபாஷினி, வட்டாட்சியர் வாசுதேவன். மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!