அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிக்க ஷூ காலுடன் சென்ற காங்கிரஸ் எம்பி! சர்ச்சை!!

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிக்க ஷூ காலுடன் சென்ற காங்கிரஸ் எம்பி! சர்ச்சை!!
X
ஷூ காலுடன் அம்பேத்கர் சிலைக்கு சென்ற எம்பி.
திருவள்ளூரில் டாக்டர் அம்பேத்கரின் சிலைக்கு. எம்.பி. ஜெயக்குமார் ஷு காலுடன் சென்று மாலை அணிவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் திருவள்ளூரில் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் வருகைதந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்.

முன்னதாக திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் அமைந்துள்ள சட்ட மாமேதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். மாலை அணிவிக்கும் போது ஷூ காலுடன் சென்று மாலை அணிவித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!