கல்யாண வெங்கடேச பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

கல்யாண வெங்கடேச பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
X

சோழவரம் அருகே கல்யாண வெங்கடேச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சோழவரம் அருகே கல்யாண வெங்கடேச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபோகத்தில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த ஆத்தூரில் அருள்மிகு அலர்மேலு மங்கை சமேத கல்யாண வெங்கடேச பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது.இக்கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நேற்று காலை விமர்சையாக நடைபெற்றது.

இதனை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் திருக்கல்யாணம் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. முன்னாதாக பக்தர்கள் சார்பில் விநாயகர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க 21 வகையிலான சீர்வரிசை பொருட்கள் கொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் அக்னி ஹோமம் வளர்த்து வேத மந்திரங்கள் ஓதி கல்யாண வெங்கடேச பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கும் மாலை மாற்றியும், பூ பந்து உருட்டியும், திரு நாண் கயிற்றை கட்டி வைத்து கெட்டி மேளம் முழங்க திருக்கல்யாண வைபோகத்தை வெகு விமரிசையாக நடத்தினர்.

இந்த நிகழ்வின் போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்தில் முழக்கமிட்டது விண்ணை பிளந்தது. திருக்கல்யாண வைபோகத்திற்கு பிறகு மாப்பிள்ளை கல்யாண வெங்கடேச பெருமாளுக்கும் மணப்பெண்கள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கும் பட்டாச்சாரியார்கள் மஹா தீபாராதனை காட்டினர்.

பின்னர் பக்தர்களுக்கு திருக்கல்யாண தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வெங்கடேச பெருமாள் திருக்கல்யாண வைபோகத்தை கண்டு கழித்து தரிசித்து சென்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!