புழல் அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டில் பணம் கொள்ளை

புழல் அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டில் பணம் கொள்ளை
X
புழல் அடுத்த லட்சுமி புறத்தில் கோவில் உண்டியலை தூக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி, புழல் அடுத்த லட்சுமிபுரம் பகுதியில் பழமை வாய்ந்த ஓம் சக்தி ஆதிபராசக்தி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நாள்தோறும் பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி அவர்களால் முடிந்த காணிக்கை பணம் அங்குள்ள உண்டியலில் செலுத்தி செல்வர்.

இந்த நிலையில் கோவிலின் பூசாரி வழக்கம் போல காலை பூஜைகள் செய்ய வந்த போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது கோவிலின் உண்டியல் காணாமல் போனது தெரிய வந்தது.

இதனையடுத்து கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்கானிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் உண்டியலை அலேக்காக தூக்கி கொண்டு சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து கோவில் பூசாரி புழல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவிலின் உண்டியலை உடைத்து அலேக்காக தூக்கிச் செல்லும் இந்த சிசிடிவி காட்சிகள் வேகமாக பரவி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு