வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
X

பைல் படம்.

திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் பணம் கொள்ளையடித்துச் சென்றது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகர் சாரதாம்பாள் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் பாக்கியவதி. இவர் திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் வழக்கம் போல் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு புறப்பட்டு சென்றனர்.

பணி முடித்துவிட்டு மாலை பாக்கியவதி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் பூட்டி இருந்த பூட்டை உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது துணி,மணிகள் பொருட்கள் சிதறி கிடந்தன.

மேலும் பீரோவின் அறையை உடைத்து அதில் இருந்த 15.சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 45 ஆயிரம் ரொக்க பணம் மர்ம நபர்களால் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இது சம்பந்தமாக மணவாள நகர் காவல் நிலையத்தில் பாக்கியவதி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தடையங்களை சேகரித்து. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளின் பதிவுகளை கொண்டு ஆய்வு செய்து வருகினறனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் கொள்கைக்கு காரணமான மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சாரதாம்பாள் நகர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story