ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரப்பரப்பு

ஆட்சியர்  அலுவலகத்தில் குடும்பத்துடன்  தீக்குளிக்க முயன்றதால் பரப்பரப்பு
X

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற  குடும்பத்தினர்.

சொத்து தகராறில் உடன் பிறந்தவர்கள் ஏமாற்றுவதாக கூறி குடும்பத்துடன் ஆட்சியர் காலில் விழுந்தனர்

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாமரைப்பாக்கம் கூட்ரோடு அம்மணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அழகேசன். இவரது மனைவி புஷ்பலதா. இவர்களது 11 வயது மகள் தியா, மகன் சாய்நாத் ஆகியோருடன் கேனில் கொண்டு வந்த டீசல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த மக்கள் தீக்குளிக்க முயன்றதை தடுத்து நிறுத்தினர்.

அப்போது ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், தீக்களிக்க முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.சொத்து தகராறில் உடன் பிறந்தவர்கள் ஏமாற்றுவதாக கூறி குடும்பத்துடன் காலில் விழுந்தனர்.நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் கூறியதை அடுத்து திருவள்ளூர் நகர போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.


Tags

Next Story