திருவள்ளூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வெழுதும் 32,931 மாணவர்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வெழுதும்  32,931 மாணவர்கள்
X

திருவள்ளூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அரசு பொது தேர்வு எழுதினர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 138 தேர்வு மையங்களில் 32,931 மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதி வருகின்றனர்.

தமிழகத்தில், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு கடந்த, 1 ம் தேதி தொங்கி, இந்த மாதம், 22 ம் தேதி நிறைவடைந்தது. அதே போல் பிளஸ் 1 பொதுத்தேர்வு இந்த மாதம், 4 ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று 26-ஆம் தேதி முதல் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி, வருகின்ற ஏப்ரல் மாதம், 8 ம் தேதி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில், 16,348 மாணவர்களும், 16,583 மாணவியர்களும் என மொத்தம், 32,931 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். இவர்கள் 138 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.


அதே போல் பார்வையற்றோர் 15 பேரும், மாற்றுத் திறனாளிகள் மற்றும் சொல்வதை எழுதுபவர்கள் 540 பேரும் இந்த தேர்வை எழுதுகின்றனர்.

இந்நிலையில் தேர்வு மையங்களில், மாணவர்களுக்கு தேர்வு எழுவதற்காக தேவையான மேஜைகள் அமைத்தும், பதிவெண்கள் எழுதும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

மூன்று பள்ளிகளுக்கு ஒரு பறக்கும் படை கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டு தீவர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருவள்ளூரில் உள்ள ஆர்.எம்.ஜெயின் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது முதன்மைக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
குளிர்காலத்தில் உங்க மூக்கு ரொம்ப அடைச்சு மூச்சு விட சிரமமாக இருக்கா..? அப்போ இதை குடிச்சு பாருங்க..!