கார் கண்ணாடியை உடைத்து ரூ.1.30 லட்சம் திருட்டு: போலீசார் விசாரணை
பணம் கொள்ளையடிக்கப்பட்ட கார்.
திருவள்ளூர் மாவட்டம், காக்கலூர் நியூ மாருதி டவுன் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் காஞ்சிபுரம் நகர போலீஸ் நிலையத்தில் முதல் நிலை குற்றப்பிரிவு காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் தனது மகள் பிரசவ செலவிற்காக திருவள்ளூரில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் தனிநபர் கடனாக ரூ.1.லட்சத்து 50 ஆயிரம் பெற்றுக் கொண்டு தனது காரில் வைத்து காக்களூர் பகுதியில் உள்ள யூகோ வங்கி எதிரில் காரை நிறுத்திவிட்டு காரில் இருந்த ஒரு லட்சத்தை 50,000 பணத்தில் 20 ஆயிரம் பணத்தை திருவள்ளூர் பஜார் வீதியில் அமைந்துள்ள நகைக்கடையில் இவர் அடகு வைத்திருந்த நகையை மீட்பதற்காக எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டு யூகோ வங்கிக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் திருவள்ளூர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து பின் தொடர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் காரை நோட்டமிட்டு லாவகமாக காரின் கண்ணாடியை உடைத்து ரூ.1,30,000 ரொக்க பணத்தை திருடி செல்லும் சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி தற்போது அந்த காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசாரின் காரையை பின்தொடர்ந்து நோட்டமிட்டு காரின் கண்ணாடியை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மக்களை காக்கும் போலீசாருக்கு இந்த நிலைமை என்றால் சாதாரண பொது மக்களின் நிலை என்னவோ என்பது குறித்து சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பும் நிலையில். இது போன்ற திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் சாலையோரம் பகுதிகளிலும் வங்கிகளிலும் காவல்துறையினர் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்கள் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu