திருவள்ளூர் அருகே கிருத்துவ தேவாலய கதவின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
கிருத்துவ தேவாலயத்தில் திருடன் உள்ளே நுழைந்து உண்டியல் உடைக்கும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் படத்தில்.
திருவள்ளூர் அருகே பழமை வாய்ந்த புட்லூர் சிஎஸ்ஐ கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் சிறுவர்கள் உண்டியலில் இருந்த காணிக்கை பணம் திருடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அடுத்த புட்லூர் பகுதியில் சுமார் 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த புட்லூர் குருசேகரம் சிஎஸ்ஐ கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் சுமார் 125 குடும்பங்களைச் சார்ந்த திருச்சபை விசுவாச பெருமக்கள் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயத்திற்கு வந்து ஆராதனையில் கலந்து கொள்வது வழக்கம்.
மேலும் இந்த திருச்சபையானது சனிக்கிழமை மகளிர் கூட்டம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை திருச்சபை ஆராதனை ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே திருச்சபை திறக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருச்சபை வழக்கம் போல மூடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு திருச்சபை அருகே உள்ள சபையின் பொருளாளர் மேத்யூ திருச்சபைக்குள் சத்தம் வருவதை கேட்டு ஓடி வந்து பார்த்தபோது திருச்சபையின் இரண்டு கதவுகளும் உடைக்கப்பட்டு உண்டியலும் உடைக்கப்பட்டு சிறுவர்கள் சண்டே கிளாஸ் வைத்த உண்டியல் பணம் சுமார் 3000 ரூபாய் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து செவ்வாய்பேட்டை காவல் துறைக்கு அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து வந்து திருச்சபையில் நடைபெற்ற திருட்டு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் திருச்சபையில் நடைபெற்ற திருட்டுச் சம்பவம் குறித்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் சமூக வலைதளங்களில் தற்பொழுது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளில் டிப் டாப் திருடன் ஒரு கையில் டார்ச் லைட்டை பிடித்துக் கொண்டு திருச்சபை உண்டியலை தேடுவதும் மற்றொரு கையில் உண்டியலை உடைப்பதற்கான கௌபார் வைத்திருப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. மேலும் இந்த காட்சியில் சுவாரசியமாக திருச்சபையில் திருடுகிறோம் என்பதை உணர்ந்த திருடன் திருச்சபையின் புனிதத்தை காக்கும் வகையில் காலில் காலணிகளை அணியாமல் தன்னுடைய கையிலே ஏந்தியவாறு திருச்சபை சிறுவர்கள் சேர்த்து வைத்த உண்டியலை உடைத்து பணத்தை கையிலே எடுத்து என்னும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் புட்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu