ஏகாட்டூர் ரயில் நிலையம் அருகே வியாபாரியின் மோட்டார் சைக்கிள் திருட்டு

ஏகாட்டூர் ரயில் நிலையம் அருகே வியாபாரியின் மோட்டார் சைக்கிள் திருட்டு
X

சித்தரிக்கப்பட்ட படம்.

ஏகாட்டூர் ரயில் நிலையம் அருகே மோட்டார் சைக்கிள் திருடியவரை சி.சி.டி.வி. பதிவு அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் ஏகாட்டூர் கிராமம் மீனாட்சி நகரில் வசிக்கும் தங்கராஜ் மகன் பழைய இரும்பு வியாபாரம் செய்து வரும் கண்ணன் . இவர் மேல்நல்லாத்தூர் பகுதியில் உள்ள தனியார் பழைய இரும்பு கம்பெனிக்கு சென்று மாலை 7 மணியளவில் வீடு திரும்புவதை வழக்கம். அதுபோல், இரவு 12.00 மணியளவில் வீட்டிற்கு வெளியே நிறுத்திய மோட்டார் சைக்கிளை யாரோ அடையாளம் தெரியாத நபர் திருடிக் கொண்டு செல்வதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனையடுத்து, அவரது இரண்டு மகன்களாகிய கண்ணன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் திருடுபோன மோட்டார் சைக்கிளை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிடத்திற்கு பிறகு சி.சி.டி.வி.யில் பதிவான காட்சியில் இருந்த ஒருவர் தங்களின் மோட்டார் சைக்கிளை ஓட்டி வருவதைக் கண்டு அந்த நபரை மடக்கிப் பிடிக்க முயன்றபோது அவர் தப்பிச்சென்றுள்ளார்.

இதுகுறித்து கடம்பத்தூர் காவல் நிலையத்தில் கண்ணன் புகார் அளித்தார். புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து கடம்பத்தூர் போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
the future of ai in healthcare