நீர் ஓடையை மீட்டு தர வேண்டி கிராம மக்கள் கோரிக்கை

நீர் ஓடையை மீட்டு தர வேண்டி கிராம மக்கள் கோரிக்கை
X

கிராம மக்கள் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

பொன்னேரி அருகே தச்சூரில் நீர் ஓடையை மீட்டு தர வேண்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் தச்சூர் புதிய கவரைபேட்டை காவல் நிலையம் அருகில் நிலத்தில் வீட்டு மனை பிரிவு செய்து இடத்தை விற்பனை செய்ய உள்ளனர். இந்த இடத்தை சுற்றி மூன்று பக்கமும் மிகப் பெரிய நீர்ஓடை பல மீட்டரில் அமைந்துள்ளது.

மேலும் இந்த நிலத்தின் அருகில் பல ஏக்கரில் நெல் பயிர் விவசாயம் செய்து வருகின்றனர். விவசாய நிலத்தின் உரிமையாளர்கள் ஓடையை ஆக்கிரமிப்பு செய்து வீட்டு மனை பிரிவு செய்து வருகின்றனர். வரும் மழைக் காலங்களில் கொசஸ்தலை ஆறு மற்றும் பிச்சாட்டூர் ஏரியில் இருந்து இந்த ஓடை வழியே மழை நீர் சென்று பொன்னேரி ஏரியில் மழை நீர் கலக்கின்றன.

இந்த ஓடையை இவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் மனை பிரிவுகளிலும் ஊருக்குள்ளும் விவசாயம் நிலங்களிலும் வெள்ள நீர் புகும் அபாயம் உள்ளது எனவும் இந்த ஆக்கிமிப்பாளர்களிடமிருந்து ஓடையை மீட்டு அந்த இடத்தை ஆய்வுசெய்து மழைக்காலங்ளில் வெள்ளம் போல் மழைநீர் நிற்கும் அந்த இடத்தை மக்களை ஏமாற்றி விற்க நினைக்கும் அந்த மனை பிரிவிற்கு அங்கீகாரம் ஆவணம் தரக்கூடாது என கூறி கிராம மக்கள் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!