மின்கம்பிகளை சீரமைக்க வந்த மின்வாரிய ஊழியர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

மின்கம்பிகளை சீரமைக்க வந்த மின்வாரிய ஊழியர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதம்
X

பைல் படம்.

பனையஞ்சேரி கிராமத்தில் மின் கம்பிகளை சீரமைக்க வந்த மின்வாரிய ஊழியர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பனையஞ்சேரி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு அடிக்கடி மின்கம்பிகள் அறுந்து விழுந்து மின்தடை ஏற்படுவதாக புகார் கூறப்படுகிறது. இந்நிலயில் நேற்று இரவு கிராமத்தில் மின்கம்பி அறுந்து விழுந்த மின் தடை ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக கிராமத்திற்கு சென்ற மின்வாரிய ஊழியர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட மின்கம்பிகளை முறையாக பராமரிக்காமல் இருப்பதால் அடிக்கடி தங்களது கிராமத்தில் மின்தடை ஏற்பட்டு மாணவர்கள், நோயாளிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், விளைநிலங்களில் மின்கம்பிகள் மிகத் தாழ்வான நிலையில் உள்ளது. மின் கம்பிகள் மீது செடி கொடிகள் வளர்ந்து மழைக்காலங்களில் ஆபத்து விளைவிக்கும் விதத்தில் உள்ளதாகவும், இதனை சீர் செய்து தர வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

பல மின் கம்பங்களும் சேதம் அடைந்துள்ளதாகவும் அவற்றையும் மின்கம்பிகளையும் உடனே மாற்றி மின் தடையில்லா நிலையை ஏற்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொண்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக மின்வாரிய ஊழியர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்