அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்

அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்
X
கீழ்சேரி அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

திருவள்ளூரில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்காக அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, ஒரு குழந்தை கூட பசியால் வாடக்கூடாது எனவும், வருங்கால சந்ததிகளை உருவாக்குவதற்கான முதலீடு எனவும் அவர் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அவருக்கு மாணவிகள் உற்சாகமாக பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர், மாணவ ம்ணவிகளுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு மகிழ்ந்தார்.இந்த நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமை தாங்கினார். தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார்.திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில், திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மற்றும் மாணவ மாணவிகள் தமிழ்நாடு முதல்வருக்கு நினைவுப் பரிசு வழங்கினர். தொடர்ந்து காலை உணவு திட்டம் குறித்த குறும்படம் ஒளிபரப்பானது.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசுகையில், இந்த திட்டத்தை தொடங்கி வைத்ததால் நான் மகிழ்ச்சியோடு இங்கு நின்று கொண்டிருக்கிறேன்.

தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் என உங்களின் எதிர்கால வளர்ச்சிக்காக பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்த உங்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திட்டத்தை தொடங்கி வைக்க முக்கிய காரணம், சென்னையில் உள்ள பள்ளிக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற போது அங்கு வந்த ஒரு மாணவன் சாப்பிடாமல் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து உருவாக்கப்பட்டது தான் இந்த காலை உணவுத்திட்டம்.

இந்த திட்டத்திற்காக எவ்வளவு செலவானாலும் அரசுக்கு பரவாயில்லை. எந்த ஒரு குழந்தையும் பசியால் வாடக்கூடாது என்பதற்காகவே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தார்.

அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தொடங்கப்படுமா என்று கேட்டதன் எதிரொலியாக இந்த திட்டத்தை இன்று தொடங்கி வைக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தால் அரசு பள்ளிகளில் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் என மொத்தம் 20 லட்சத்தி 73 ஆயிரம் மாணவ மாணவிகள் பயன்பெறுவார்கள்.

மாணவர்கள் தமிழகத்தின் எதிர்கால சொத்து. எனவே இந்த திட்டத்திற்காக நீதி ஒதுக்கீடு குறித்து அதிகாரிகள் கேட்டதற்கு இது வருங்கால சந்ததிகளை உருவாக்குவதற்கான முதலீடு என சொல்லுங்கள் என அதிகாரிகளிடம் தெரிவித்ததாக தெரிவித்தார்.

இந்த திட்டம் மாணவ மாணவிகள் மட்டுமல்லாது பெற்றோர்களுக்கும் பொருளாதார சுமையை குறைக்கிறது. ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி என இரண்டு பேரும் வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தை பத்திரிகைகள் பாராட்டா விட்டாலும் பொதுமக்கள் பாராட்டுகின்றனர். நாள்தோறும் மக்கள் நல திட்டங்களை முறையாக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்தத் முன்னோடி திட்டத்தை இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களும் கனடா போன்ற பிற நாடுகளிலும் பின்பற்ற தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது என்று பேசினார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள பள்ளிக்கு சென்று குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என்பதை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

நீட், ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை போன்று பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருவதை விட தடுப்பது தான் முதல் பணி என தெரிவித்தார். நீட் முறைகேடு குறித்து உச்ச நீதிமன்றமே கேள்வி கேட்கின்ற சூழ்நிலை தற்போது எழுந்துள்ளது.

நீட் புதிய கல்விக் கொள்கை போன்றவை தேவையற்றது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இந்த நீட்டுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ்நாடு அரசு இந்த தடைகளை உடைத்தெறிவோம் என தெரிவித்தார்.

மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். கல்விதான் திருட முடியாத சொத்து. எனவே மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் படிக்க படிங்க படிங்க நீங்கள் படித்து முன்னேறினால் உங்கள் குடும்பம் மட்டுமல்ல உங்கள் ஊர் மட்டுமல்ல உங்கள் நாடே உயரும் என பெருமிதம் தெரிவித்து மாணவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!