உபகரணங்கள் இன்றி வெறும் கைகளால் கழிவு நீரை சுத்தம் செய்யும் அவல நிலை

பாதுகாப்பு உபகரணங்கன் இன்றி கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் துப்புரவு தொழிலாளி.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி வெறும் கைகளால் கழிவு நீரை சுத்தம் செய்யும் அவல நிலை அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்பட்டு வரும் உணவகங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அதிக அளவில் சென்று அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வந்தது, மேலும் இந்நிலையில் கழிவு நீரை வெளியேற்றுவதற்காக நபர் ஒருவரை வரவைத்து அவருக்கு எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் வழங்காமல் கைகளாலே கழிவுநீர் அகற்றி வரும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,
வெளிப்பகுதியில் நடைபெற்றால் அவர்களுக்கு அபராதம் விதித்து சீல் வைக்கக்கூடிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே இந்த ஒரு அவல நிலை ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,
மாவட்ட ஆட்சியரகத்திலேயே இந்த ஒரு அவல நிலை உள்ளது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற நிலையை கவனிக்க அதிகாரிகள் மீது யார் நடவடிக்கை எடுப்பார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மீஞ்சூர் அருகே தனியார் பள்ளியில் இரண்டு பேர் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது உயிரிழந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே இது போன்ற அவல நிலை அரங்கேறி உள்ளது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வீடியோவை பார்த்த பின்னராவது உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu