திருவள்ளூர் ஆட்சியரிடம் 10 கோரிக்கை அடங்கிய மனு வழங்கினார் எம்.எல்.ஏ.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் 10 கோரிக்கைகள் அடங்கிய மனுவை சந்திரன் எம்எல்ஏ வழங்கினார்.
Tiruvallur District Collector -தமிழகம் முழுவதும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நீண்ட நாள் நிறைவேற்றப்படாமல் தொகுதிகளில் உள்ள பிரதான 10 கோரிக்கைகள் கொண்ட மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்குமாறு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதல்வர் உத்தரவிட்டதன் பேரில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் திருத்தணி எஸ்.சந்திரன் தனது திருத்தணி தொகுதிக்குட்பட்ட நீண்ட நாளாக தீர்க்கப்படாத 10 கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பீஜான் வர்கீஸ்சிடம் வழங்கினார்
அந்த மனுவில் திருத்தணி சுற்றுவட்டார பகுதியில் 2 லட்சத்திற்கும் அதிகமாக நெசவாளர்கள் வசிப்பதால் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும்,
இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் சிப்காட் வணிக வளாகம் அமைத்திட வேண்டும், திருத்தணி தொகுதி விவசாயிகளுக்கு முப்பொழுதும் விளைவிக்க ஏதுவாக நீர் நிலையை பாதுகாக்கும் வகையில் அணை கட்ட வேண்டும்,
ஆர்.கே. பேட்டை பகுதியில் பணிமனையுடன் இணைந்த பேருந்து நிலையம் அமைத்திட வேண்டும்,பள்ளிப்பட்டு பகுதியில் நிலத்தடி நீரை அதிகரிக்கும் வகையில் தடுப்பணை அமைத்திட வேண்டும், நெடியம் கொசத்தலை ஆற்றின் கோரிக்கை தரைப்பாலத்தை மாற்றி உயர்மட்ட பாலமாக கட்டித் தர வேண்டும்,
ஆர்.கே. பேட்டை வேணுகோபாலபுரம் பகுதியில் ஏரிகளை தூர்வாரி கரைகளை பலப்படுத்தும் ஏரி நீர் வெளியேற மதங்களை சீரமைக்க வேண்டும், பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்திட வேண்டும் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை கட்டித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகள் இடம்பெற்று இருந்தன.
அப்போது ஒன்றிய பேரூர்ச் செயலாளர்கள் பெ.பழனி, டி.ஆர்.பாபு, ஒன்றிய குழு துணை தலைவர்கள் பொன்.சு.பாரதி, திலகவதி ரமேஷ், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ரகு ஊராட்சி மன்ற தலைவர் ராஜா உள்பட தி.மு.க. நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் உடன் இருந்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu