திருவள்ளூரில் வீடுகளில் தேசிய கொடி ஏற்றிய எம்.எல்.ஏ., கலெக்டர்

திருவள்ளூரில் வீடுகளில் தேசிய கொடி ஏற்றிய எம்.எல்.ஏ., கலெக்டர்
X

திருவள்ளூரில் வீடு வீடாக தேசிய கொடி ஏற்றுவதற்காக சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன், ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் சென்றனர்.

திருவள்ளூரில் வீடுகளில் தேசிய கொடியை எம்.எல்.ஏ. விஜி ராஜேந்திரன், கலெக்டர் ஆல்பீ ஜான் வர்கீஸ் ஆகியோர் ஏற்றினர்.

75வது சுதந்திர தின விழா வருகின்ற 15 ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது. அதை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து நேற்று திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ வி.ஜி. ராஜேந்திரன், ஆட்சியர் ஆல்பீ ஜான் வர்கீஸ் ஆகியோர் திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி அதிகாரிகளுடன் வீடு வீடாகச் சென்று தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதை தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நடந்து சென்று தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

மேலும் அப்பகுதி உள்ள மக்கள் அனைவரையும் தவறாமல் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது அங்கு இருந்த ஒரு சிறுவன் தனது வீட்டிற்கு வந்து தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என வேண்டுகோள் வைத்தார். அதை தொடர்ந்து எம்.எல்.ஏ வி.ஜி. ராஜேந்திரன் சிறுவனின் வேண்டுகோளை ஏற்று உடனடியாக அச்சிறுவன் வீட்டுக்கு சென்று தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

மேலும் அச்சிறுவனின் தேச பக்தியை எம்.எல்.ஏ மற்றும் ஆட்சியர் வெகுவாக பாராட்டினர். அவருடன் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி மற்றும் நகராட்சி பணியாளர்கள் பலர் உடன் இருந்தனர். அதற்கு முன்னதாக திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் என் குப்பை என் பொறுப்பு என்பதை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வுயில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். பேரணியை ஆட்சியர்ஆல்பீ ஜான் வர்கீஸ் நகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself