பெரியபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம்

பெரிய பாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து பெரியபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 300-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
விலைவாசி உயர்வை கண்டித்து தமிழக முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் எதிரே செப்டம்பர் எட்டாம் தேதி மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி இன்று தமிழகம் முழுவதும் ஆரப்பாட்டங்கள் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊத்துக்கோட்டை வட்டச் செயலாளர் ஏஜி.கண்ணன் தலைமையில் 300.க்கும் மேற்பட்டோர் கையில் பதாகை ஏந்தி ஆளும் மத்திய அரசு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊர்வலமாக சென்று பெரியபாளையம் பஜார் வீதியில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது 300க்கும் மேற்பட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். சாலை மறியல் காரணமாக சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் மேலாகவே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu