திருவள்ளூர் அருகே ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
கொள்ளை நடைபெற்ற வீட்டில் போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர்.
திருவள்ளூர் அருகே பட்டப் பகலில் ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், கைவண்டூர் கிராமம் கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அரசு பள்ளி ஆசிரியர் ஜெகன். இவரது மனைவி, மகன்கள், அனைவரும் பள்ளி, கல்லூரிகளுக்கு வழக்கமாக காலையில் புறப்பட்டு சென்று விட்டனர்.அதன் பின் மதியம் 3.20 மணியளவில் அவருடைய மூத்த மகன் வினோலியன் என்பவர் கல்லூரி முடித்து வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அருகில் உள்ள உறவினருக்கு தகவல் அளித்துள்ளார்.
அதன் பின் அவர்களின் பெற்றோர் தகவல் அறிந்து வந்து பார்த்த போது படுக்கை அறையில் பூட்டாமல் இருந்த இரண்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 சவரன் தங்க நகைகள், ரூபாய் 5ஆயிரம் பணம் இரண்டு லேப்டாப் உள்ளிட்டவை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஆசிரியர் ஜெகன் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டும் விசரணை நடத்தினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்து தடயங்களை போலீசார் சேகரித்தனர் .
இது தொடர்பாக திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து.வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு கொள்ளையானை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப் பகலில் ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் திருவள்ளூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu