திருவள்ளூரை டிஜிட்டல் நகரமாக மாற்றுவதற்கான முதல் கட்ட கண்காட்சி

கண்காட்சியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
சென்னை கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு கல்லூரி (caad) மாணவர்களின் படைப்பாற்றல் திறன் மூலம் திருவள்ளூரை டிஜிட்டல் நகரமாக மாற்றும் முயற்சியின் முதல் கட்டமாக கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சென்னை கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு கல்லூரி (CAAD)-யின் மாணவர்களால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முக்கியமான 8 இடங்களை தேர்வு செய்து அவ்விடங்களில் வாகனவசதி, பாதசாரிகளின் பாதுகாப்பு மற்றும் கண்கவரும் வகையில் நவீன டிஜிட்டல் வடிவமைப்பு முறையில் மேம்படுத்தப்பட்ட மாவட்டமாகவும் மற்றும் சுறுசுறுப்பான துடிப்பான நகர்புறமாக மாற்றவும் தேவையான விரிவான நகர்புற வடிவமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை முன்மொழியும் வகையில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியை பொதுமக்கள் பார்வைக்காக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சியை ஏராளமான பொறியியல் வல்லுநர்கள், மற்றும் பொறியியல் படித்து வரும் மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் பார்வையிட்டனர். இந்த கண்காட்சியின் உள்ள அம்சங்கள் மற்றும் பரிந்துரைகளை தமிழக அரசு அமல்படுத்தினால் திருவள்ளூர் தமிழகத்திலேயே டிஜிட்டல் மயமாக்கப்படுமும் முதல் மாவட்ட தலைநகர் என்ற பெருமையை பெறும்.
இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காயத்ரி சுப்பிரமணியன், சென்னை கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு கல்லூரி இயக்குநர் மற்றும் நகர்ப்புற வடிவமைப்பாளர் வினோத்விஜயகுமார், கல்லூரியின் தாளாளர் வி.ஆர். ராஜேந்திரன் மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவியர்கள் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu