வசூலித்த பணத்தை, வீட்டுக்கே சென்று கொடுத்த போலீசார், முதல்வர் அதிரடி

திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் அபராதமாக வசூல் செய்த பணத்தை, முதல்வரின் உத்தரவின் பேரில் போலீசார் வீட்டுக்கே சென்று கொடுத்தனர். இந்த சம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை சிறுகடல் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (48) இவர் நாம் தமிழர் கட்சியில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியாக இருக்கிறார்.

இவரது மனவளர்ச்சி குன்றிய 9 வயது மகன் நிதிஷ்குமாருக்கு மருந்து மாத்திரைகள் வாங்குவதற்காக திருவள்ளூருக்கு தனது இருசக்கர வாகனத்தில் நேற்று சென்றுகொண்டிருந்தார்.

அப்போது காக்களூர் புறவழிச்சாலையில் சென்றபோது சோதனைச் சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர். அப்பொழுது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தலைக்கவசம் அணியவில்லை என கூறி மருந்து வாங்க வைத்திருந்த ரூ. 500 ஐ அபராதம் என்ற பெயரில் வாங்கியுள்ளார்.

இதையடுத்து தனது மகனுக்கு மருந்து மாத்திரை வாங்க வைத்திருந்த பணம் திருப்பி அளிக்கும்படி கூறியும் கொடுக்காமல் அனுப்பி வைத்துள்ளனர். இதை எடுத்து வீட்டுக்கு சென்ற பாலகிருஷ்ணன் உடனே இந்த ஆட்சியில் குறைந்த நேரத்தில் போலீசார் அராஜகம் செய்வதாக கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் வைரலான நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காவல்துறை டி.ஜி.பி ஆகியோருக்கும் தெரியவந்துள்ளது. உடனே முதல்வர் அலுவலகத்திலிருந்து தொடர்புகொண்டு என்ன உதவிகள் தேவையோ உடனடியாக காவல் ஆய்வாளர் மூலம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தனர்.

அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட திருவள்ளூர் தாலுகா காவல் ஆய்வாளர் மருந்து மாத்திரைகள் அளிக்கவும் காவல் துறை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து சிறுகடல் கிராமத்திற்கு கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் ரஜினிகாந்த் நேரில் சென்று பாலகிருஷ்ணனிடம் மன்னிப்பு மன்னிப்பு கேட்டதோடு, மருந்து மாத்திரைகள் மற்றும் அபராதம் ஆக வாங்கிய ரூ. 500 ஆகியவற்றை திருப்பி அளித்தார்.

எனவே டுவிட்டரில் பதிவிட்ட செய்தி வைரலாகி முதல்வர் நடவடிக்கை எடுத்து சம்பவம் அந்த குடும்பத்தினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
காசநோய், டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு: ஈரோட்டில் விழிப்புணர்வு முகாம்