மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் புகுந்த சாரைப்பாம்பு; அலறியடித்து ஓட்டம் பிடித்த ஊழியர்கள்

மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் புகுந்த சாரைப்பாம்பு;  அலறியடித்து ஓட்டம் பிடித்த ஊழியர்கள்
X

மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் புகுந்த சாரைப்பாம்பு

திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் திடீரென 6 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு புகுந்ததில் ஊழியர்கள் அலறி அடுத்து ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் 6 அடி நீளம் உள்ள சாரை பாம்பு புகுந்ததால் பணியில் இருந்த அரசு ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம், சமூக நலத்துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தின் உள்ளே திடீரென சாரை பாம்பு ஒன்று உள்ளே புகுந்துள்ளது.இதனை கண்ட ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு கூச்சலிட்டு வெளியே ஓடி வந்தனர். இது குறித்து உடனடியாக, திருவள்ளூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த

திருவள்ளூர் தீயணைப்புத்துறை வீரர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்திற்குள் நுழைந்த 6 அடி நீளமுள்ள சாரை பாம்பை லாவகமாக பிடித்து பூண்டி காப்புக்காட்டில் விட எடுத்துச் சென்றனர். தீயணைப்பு துறையினர் பிடித்த பிறகுதான் தெரிந்தது, அது 6 அடி நீளம் உள்ள சாரை பாம்பு என தெரியவந்தது. அலுவலகத்திற்குள் நுழைந்த பாம்பு பிடிக்கப்பட்டது என்ற செய்தியை அறிந்த அலுவலக ஊழியர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டு பின்னர் பணிக்கு சென்றனர். மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் 6 அடி சாரைப்பாம்பு புகுந்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது