மருத்துவமனை சுவரிலிருந்து தவறி விழுந்த போதை ஆசாமிக்கு எலும்பு முறிவு
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல் தளத்திலிருந்து தரை தளத்திற்கு வரும் வழியில் சாய்தளம் ஓரத்தில் தடுப்பு சுவர் எழுப்பி உள்ளனர்.
பாதுகாப்பற்ற இந்த தடுப்பு சுவர் அருகே சுவரோ, தரை தளமோ இல்லாததால் அங்கே யாரும் அமராத வகையில் மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.ஆனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளி்கள் மற்றும் அவர்களை பார்க்க வரும் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் இருக்கைகள் இல்லாததால் அந்த தடுப்பு சுவரில் அமர்கின்றனர்.
இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் கிராமம் பள்ளித்தெருவைச் சேர்ந்த மணி என்பவரது மகன் கமல் என்பவர் உடல் நலக்கோளாறு காரணமாக மருத்துவமனைக்கு வந்தவர் அந்த தடுப்பு சுவற்றின் மீது அமர்ந்துள்ளார். குடிபோதையில் இருந்த அவர் முதல் தளத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். இதனால் அவருடைய இடுப்பு எலும்பு முறிந்து விட்டது.
இதனையடுத்து அவரை உடனடியாக மீட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். எனவே சாய்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவரின் அருகில் யாரும் தவறி கீழே விழாதவாறு தடுப்புகள் அமைத்திட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu