இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும்  சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
X

இருசக்கர வாகனம் திருடும் சிசிடிவி காட்சி.

திருவள்ளூரில் இருசக்கர வாகனத்தில் சாவி விட்டு ஷோரூம் குள் சென்ற நபரின் இருசக்கர வாகனம் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அடுத்த காக்களூர் சாலையில் உள்ள டார்லிங் டிவி ஷோரூம் முன்பு மணவாள நகர் சிறுதொண்டன் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 47). இவர் தனது குழந்தைகளுடன் டிவி வாங்குவதற்காக ஷோரூமுக்கு சென்றுள்ளார். அப்போது குழந்தைகள் இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கி ஷோரூமுக்குள் ஓடவே வாகனத்தை நிறுத்திவிட்டு அவர்கள் பின்னாலேயே முருகன் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வாகனத்திலேயே சாவி விட்டுவிட்டு வந்ததை அறிந்த முருகன் வெளியே வந்து பார்த்தபோது தனது இரு சக்கர வாகனம் மாயமானது தெரியவந்தது.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியின் மூலம் ஆய்வு செய்தபோது, அவ்வழியே சொல்லும் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை நோட்டமிட்டு ஆட்கள் யாரும் இல்லை என உறுதி செய்த பின்பு இரு சக்கர வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் மூலமாக தெரிய வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் முருகன், புகார் அளிக்கப்பட்டுள்ளார் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த திருவள்ளூர் தாலுகா காவல்துறையினர் காணாமல் போன இரு சக்கர வாகனத்தை தேடி வருகின்றனர்.

இதே போல் திருவள்ளூர் அரசு மருத்துவமனை, மணவாளநகர் தேரடி உள்ளிட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மாயமாகும் சூழல் ஏற்பட்டு வருகின்ற, எனவே இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளியின் மீதுகாவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!