முன்னாள் துணை ஆட்சியர் விபத்தில் சிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
பைல் படம்.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் புதுமாவிலங்கை அகரம் சன் சிட்டி பகுதியில் வசித்துவந்த ரோஸ் (70) துணை ஆட்சியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவர் தற்போது திருவள்ளூரில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் நிலம் கையகப்படுத்தும் பிரிவில் ஓய்வு பெற்ற வட்டாட்சியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்தநிலையில் தினமும் காலை கடம்பத்தூர் அகரம் பகுதியிலிருந்து திருவள்ளூருக்கு பணி நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் வந்து செல்வதை ரோஸ் வழக்கமாகக் இருந்த நிலையில், நேற்று பணி முடிந்து மாலை திருவள்ளூர் தலைமை தபால் நிலையம் அருகே வந்தபோது டிப்பர் லாரி பின் டயர் ரோஸ்சின் இருசக்கர வாகனம் மீது உரசி கீழே விழுந்துள்ளார்.
இதில் லாரியின் டயர் ரோஸ் மீது ஏறி படுகாயம் அடைந்தார். பின்னர் அவரை மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்சில் திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாததால் முன்னாள் துணை ஆட்சியர் ரோஸ் உயிரிழந்தார்.
இந்த நிலையில் முன்னாள் துணை ஆட்சியர் இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி பின்பக்க டயர் உரசி விபத்தில் சிக்கும் பதபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu