பூண்டி ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் சடலமாக மீட்பு

பூண்டி ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் சடலமாக மீட்பு
X

பூண்டி ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட மீனவர்.

பூண்டி ஏரியில் மீன் படிக்கச் சென்ற மீனவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் கொழுந்தலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன்(30). இவருக்கு எஸ்தர் என்ற மனைவியும், குகன்(7) என்ற மகன், சுப்ரியா(5) என்ற மகளும் உள்ளனர்.

விஜயன் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருபவர் , என்றும் வழக்கம் போல் நேற்று காலை 6 மணி அளவில் பூண்டி ஏரியில் தன்னுடைய படகில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.

எப்பொழுதும் காலை 9 மணியளவில் வீடு திரும்பும் விஜயன் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், மதியம் மணி அளவில் விஜயன் மீன் பிடிக்கும் இடத்திற்குச் சென்று பார்த்தனர் விஜயனின் மனைவி எஸ்தர், உறவினர்கள் பூண்டி ஏரிக்கு சென்று பார்த்தபோது படகு மட்டும் இருந்துள்ளது.

விஜயன் மாயமானதைக் அறிந்து அதிர்ச்சியடைந்த அவர்கள் திருவள்ளூர் அருகே புல்லரம்பாக்கம் காவல்நிலையத்திற்கு இதுகுறித்து புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் காவல்துறையின் வழக்குப்பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தீயணைப்பு துறையினர் ஐந்திற்க்கும் மேற்பட்டோர் மாயமான விஜயனை பூண்டி ஏரியில் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது ஏரியில் இரண்டு கிலா மீட்டருக்கு அப்பால் சகதியில் பிணமாக கிடந்தார். அவரது உடலை மீட்ட தீயணைப்பு துறையினர் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!