வீரராகவர் கோவிலில் தை அமாவாசையையொட்டிமுன்னோர்களுக்கு திதி :அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

தை அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் சிறப்பு வாய்ந்த நாளான இன்று திருவள்ளூர் வீரராகவர் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.
Thai Amavasai Temple Crowd
108 திவ்ய தேசங்களில் ஒன்றானது திருவள்ளூர் வைத்திய வீரராகவர் பெருமாள் கோவில். இக்கோயிலின் சாலிஹோத்ர மகரிஷிக்கு தை அமாவாசை மற்றும் சிரவண நட்சத்திரம் இணைந்து வந்த நாளில் ‘ஹ்ருத்தாப நாசினி குளத்தில் அருகே காட்சியளித்தார்.இதனால் இக்கோயிலில் தை அமாவாசை மிக விமர்சையாக நடைபெற்று வருகின்றது.
மேலும் சாலிஹோத்ர மகரிஷிக்கு வீரராகவர் காட்சி அளித்த நாள் என்பதால் தை அமாவாசையன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், இங்கு வந்து திருவள்ளூர் வீரராகவர் கோவிலுக்கு அருகில் உள்ள ஹிருதாபநாசினி குளத்தில் புனித நீராடி, வீரராகவரை வழிபட்டால், நோய்கள் மற்றும் பித்ரு தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இன்று தை அமாவாசை என்பதால் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் நேற்று மாலை முதலே திருவள்ளூர் வந்தனர்.இன்று அதிகாலை, குளத்தின் அருகே மற்றும் காக்களூர் பாதாள விநாயகர் கோயில் அருகே உள்ள ஏரியில் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
பின்னர், கோவிலில் கண்ணாடி மண்டபத்தில் முத்தங்கி சேவையில் எழுந்தருளிய உற்சவர் வீரராகவ பெருமாள் . மூலவர் வீரகவா பெருமாளை 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் வழிபட்டனர்.பக்தர்கள் வருகை திடீரென அதிகரித்ததால், திருவள்ளூர் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தை அமாவாசை மற்றும் சிரவண நட்சத்திரம் இணைந்து வந்த நாளில் ‘ஹ்ருத்தாப நாசினி குளத்தில் அருகே காட்சிளித்தார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu