வீரராகவப் பெருமாள் கோவில் தை மாத பிரமோற்சவ விழா நாளை தொடக்கம்

அனந்த சயனத்தில் காட்சியளிக்கும் வீரராகவ பெருமாள் (கோப்பு படம்)
Temple Brahmorsavam Start Tomorrow
திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா நாளை தொடங்குகிறது.108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூா் வீரராகவப் பெருமாள் கோவில் தை மாத பிரமோற்சவ விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.
இவ்வாண்டு விழா வரும் 4ம் தேதி காலை 5.15 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.தொடர்ந்து காலை 7 மணிக்கு தங்க சப்பரத்தில் உற்சவர் வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவி சமேதராக திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.இரண்டாம் நாள் 5.ம் தேதி காலை ஹம்ச வாகனத்திலும், இரவு சூரிய பிரபையிலும் உற்சவா் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.
பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான 6-ம் தேதி காலை கருட சேவையும் கோபுர தரிசனமும் நடைபெறுகிறது.தொடர்ந்து 4வது நாள் 7-ம் தேதி காலை சேர்ஸ வாகனமும் மாலை சந்திர பிரபை உற்சவம் நடைபெறும்.
5 வது நாள் காலை நாச்சியார் திருக்கோலம் இரவு யாளி வாகனமும், 6 வ்து நாள் 9ம் தேதி வெள்ளிக்கிழமை தைஅமாவாசையை முன்னிட்டு ரத்னாங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான 10ஆம் தேதி காலை திருத்தோ் திருவிழாவும், 10ம் நாளான 13-ஆம் தேதி வெட்டிவோ் சப்பரத்தில் இரவு 8 மணிக்கு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கவும் உள்ளாா்.இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu